unfoldingWord 11 - பஸ்கா
គ្រោង: Exodus 11:1-12:32
លេខស្គ្រីប: 1211
ភាសា: Tamil
ទស្សនិកជន: General
គោលបំណង: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
ស្ថានភាព: Approved
ស្គ្រីបគឺជាគោលការណ៍ណែនាំជាមូលដ្ឋានសម្រាប់ការបកប្រែ និងការកត់ត្រាជាភាសាផ្សេង។ ពួកគេគួរតែត្រូវបានកែសម្រួលតាមការចាំបាច់ដើម្បីធ្វើឱ្យពួកគេអាចយល់បាន និងពាក់ព័ន្ធសម្រាប់វប្បធម៌ និងភាសាផ្សេងៗគ្នា។ ពាក្យ និងគោលគំនិតមួយចំនួនដែលប្រើអាចត្រូវការការពន្យល់បន្ថែម ឬសូម្បីតែត្រូវបានជំនួស ឬលុបចោលទាំងស្រុង។
អត្ថបទស្គ្រីប
மோசேயையும் ஆரோனையும் பார்வோனிடத்திற்கு தேவன் அனுப்பி, நீ இஸ்ரவேலரை போகவிடு, இல்லையெனில் எகிப்திலுள்ள முதலில் பிறந்த எல்லா ஆண்பிள்ளைகளையும், மிருகஜீவன்களையும் தேவன் அழிப்பார் என்று எச்சரித்தனர். இதைக் கேட்டும் பார்வோன் தேவனுக்குக் கீழ்படியவில்லை.
தன்னை விசுவாசிக்கிறவர்களின் முதல் ஆண் பிள்ளைகளை காப்பாற்றும்படி, பழுதற்ற ஒரு ஆட்டுக் குட்டியை கொன்று தப்பித்துக்கொள்ள தேவன் ஒரு வழியைத் தந்தார்.
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தங்கள் வீட்டு நிலைக்கால்களின்மேல் பூசும்படி தேவன் இஸ்ரவேலரிடம் சொன்னார். மேலும் அவர்கள் இறைச்சியை சுட்டு, புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்டு சீக்கிரமாய் சாப்பிட்டு எகிப்தைவிட்டுப் புறப்ப சொன்னார்.
தேவன் தங்களுக்கு சொன்னபடியே இஸ்ரவேலர்கள் செய்தனர். அன்று இராத்திரியில் தேவன் எகிப்து எங்கும் போய் முதல் ஆண்பிள்ளைகளை கொன்றுபோட்டார்.
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தங்கள் கதவுகளில் பூசியிருந்த இஸ்ரவேலர்களுக்கு ஒன்று சம்பவிக்கவில்லை. தேவன் அவர்களைக் கடந்து போய்விட்டார். அவர்கள் வீட்டினுள் பாதுகாப்பாக இருந்தனர்.
ஆனால் எகிப்தியர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலும் போனதினால், அவர்களைக் கடந்து போகாமல், அவர்களுடைய முதற்பிறப்புகளை எல்லாம் தேவன் கொன்றுபோட்டார்.
எகிப்தியரின் காவலில் இருக்கிறவர்களிலிருந்து, பார்வோனின் முதல் ஆண் பிள்ளைகள் வரை எல்லோரும் மரித்துப்போயினர். அவர்களுடைய துக்கம் மிகவும் கொடிதாய் இருந்ததினால் அழுகவும், புலம்பவும் செய்தனர்.
அன்று இரவில், பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைத்து, சீக்கிரமாய் இஸ்ரவேலரைக் கூட்டிக்கொண்டு எகிப்தை விட்டு போங்கள் என்றான். எகிப்தியர்கள் சீக்கிரமாய் போகும்படி இஸ்ரவேலர்களை துரிதப்படுத்தினர்.